அரசுடன் எனக்கோ, எனது கட்சிக்கோ எவ்வித ‘டீலும்’ கிடையாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான 5ம் நாள் விவாதத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில் , வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீர்மானமொன்று எடுக்கப்படும். அரசுடன் எனக்கோ, எனது கட்சிக்கோ எவ்வித ‘டீலும்’ கிடையாது.
கடந்த இரு வருடங்களில் 20 ஊடாக அவரின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தையே நான் சபையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மஹிந்த ஆட்சிகாலப்பகுதியில் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அபிவிருத்திகளின் பங்காளிகளாக நாங்களும் செயற்பட்டோம்.
ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்தது தவறான செயற்பாடு எனவும் குறிப்பிட்டார்.
#SriLankaNews