இராணுவத்தினரால் பதவியில் அமர்த்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அனைவரும் பொம்மை என்று அழைப்பதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
வியாழக்கிழமை லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸின் (பிஎம்எல்-என்) பொதுக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2018 ஆம் ஆண்டு இம்ரான் கானை மக்கள் விருப்பு வாக்குகளால் தேர்ந்தெடுக்கவில்லை. இராணுவத்தால் பதவிக்கு வந்தவர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்குள் 34 பில்லியனுக்கு கடன் தொடர்பான அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்.
புதிய பாகிஸ்தானை உருவாக்கும் தொனிபொருளில் நாட்டில் தகுதியற்று ஆட்சி புரிந்து வருவதாக அவர் மேலும் விமர்சித்தார்.
#WorldNews
Leave a comment