ஒரே நாளில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும் சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜீ.வி. குணதிலக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தாக்கம் காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதற்காகவே ஒருநாள் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஒருவர் தேசிய அடையாள அட்டையை பெற பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் தென் மாகாணத்தில் உள்ள அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமாயின் பிரதேச செயலகத்தின் அடையாள அட்டை பிரிவுக்கு சென்று வருவதற்கான தினம் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews