தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்! – தோட்டத் தொழிலாளர்களும் ஆதரவளிக்க வேண்டும் என மனோ அறைகூவல்

WhatsApp Image 2021 11 05 at 5.05.12 PM

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பால் எதிர்வரும் 9ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு தோட்டத் தொழிலாளர்களும் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறைகூவல் விடுத்துள்ளார்.

தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோரை, இலங்கை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றிய பிரதிநிதிகளான வண. யல்வெல பஞ்சாசாகர தேரர், ஜோசப் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட குழுவினர் சந்தித்து உரையாடினார்கள்.

அதன்போது இலங்கை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி செவ்வாய்கிழமை நடத்தவிருக்கும் அடையாள தேசிய எதிர்ப்பு தினத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவை கோரினர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆசிரியர்களின் எதிர்வரும் நவம்பர் 9ம் திகதி செவ்வாய்கிழமை தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version