25 68fc25278cbb0
செய்திகள்இலங்கை

செவ்வந்தியின் தொலைபேசியில் என் பெயர் எவ்வாறு சேவ் செய்யப்பட்டுள்ளது? – நாமல் ராஜபக்ச நகைச்சுவைப் பதில்!

Share

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தொலைபேசியில் தனது பெயர் எவ்வாறு ‘சேவ்’ (சேமிக்கப்பட்டு) செய்யப்பட்டிருக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அதனைப் பரிசோதித்தவர்களிடம் தான் கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

“என் பெயர் பற்றி பரிசோதித்தவர்களிடம் கேளுங்கள்”: “செவ்வந்தியின் தொலைபேசியைப் பார்ப்பதற்குப் பலரும் ஆவலாக உள்ளது போல் தெரிகிறது. செவ்வந்தியின் தொலைபேசியைப் பரிசோதித்தவர்களிடம் தான் அது பற்றிக் கேட்க வேண்டும். ‘அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது’ எனக் கூறினால் நல்லது,” என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

“‘மகே ராஜபக்ச’ (எனது ராஜபக்ச) என சேவ் செய்யப்பட்டதா?” என்ற கேள்விக்கு:

“சிலருக்கு தற்போது ராஜபக்சக்கள் தான் கனவில் கூட வருகின்றனர். அந்தக் கட்சியிலும் (NPP) நாமல் ஒருவர் இருக்கின்றார். அது அவரா என்பது கூடத் தெரியவில்லை. நாமல் என்ற பெயரைக் கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம்.”

“பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால் தான் ‘எனது’ என எழுதி சேவ் செய்வார்கள். சிலவேளை அது அப்படி சேவ் செய்யப்பட்ட ஒரு பெயராகக் கூட இருக்கலாம்,” என்று அவர் நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

Share
தொடர்புடையது
images 3 5
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் கோர மண்சரிவு: 7 பேர் பலி! 82 பேரைக் காணவில்லை – மீட்புப் பணிகள் தீவிரம்!

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

25284407 tn46
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைக்கும் பெர்ன் பனிப்புயல்: 10,000 விமானங்கள் இரத்து – 18 மாநிலங்களில் அவசரநிலை!

அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கி வரும் ‘பெர்ன்’ (Winter Storm Fern) எனப்படும் மிக சக்திவாய்ந்த...

articles2FWeZuOSJYmiw4RXxNRts3
செய்திகள்இலங்கை

2026 அரச வெசாக் நிகழ்வு மே 30-இல்: மகாநாயக்க தேரர்களின் இணக்கத்துடன் தீர்மானம்!

2026-ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச வெசாக் (State Vesak Festival) நிகழ்வை மே மாதம் 30-ஆம்...

MediaFile 2 5
செய்திகள்இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி! கட்டுநாயக்கவில் வைத்து சிஐடியினரால் கைது!

சர்வதேச பொலிஸாரினால் (Interpol) சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவிற்குத் தப்பிச் சென்று...