dvfdbhg
செய்திகள்இலங்கை

மர்மமான முறையில் கல் வீச்சுத் தாக்குதல்கள்: பீதியடையவைக்கும் மாயம்

Share

பாணந்துறை டிப்பெத்த கிராமம் பொதுமயானமொன்றின் அருகாமையில் அமைந்துள்ளது .கிராமத்தில் ஒரு மாத காலமாக மர்மமான முறையில் கல் வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல்கள் காரணமாக மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும் கிராம மக்கள் ஒருவரை ஒருவர் சந்தேகித்துக்கொள்வதாகவும், இதுவரையில் தாக்குதல்களை யார் மேற்கொள்கின்றனர் என கண்டறியவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

அண்மைய நாட்களிலிருந்து மதுபான போத்தல்களினாலும் தாக்குதல் நடாத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலில் வீட்டுக் கூரைகள் சேதமடைந்துள்ளன. சில சமயங்களில் கற்களில் வீட்டில் வசிப்பவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கிராம மக்கள் சென்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் போது வேறு ஒரு பக்கத்திலிருந்து கற்கள் வீசப்படுவதாகவும். மக்கள் வீடுகளில் இருக்கின்றார்களா இல்லையா என்பது தெரிந்தவர்களே தாக்குதல் நடாத்துவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தாக்குதல் நடாத்தப்படுவதனால் மக்கள் பெருமளவில் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...