அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள தெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையத்தில்
புறப்பட்டுச் சென்ற, செஸ்னா 210 ரக விமானம் வானில் திடீரென தீப்பிடித்தது.
இந்த விபத்தில் விமானி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்திற்கான காரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விமான விபத்து தொடர்பில் விசாரணை நடாத்தவுள்ளது
Leave a comment