images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

Share

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றில் இன்று (சனிக்கிழமை, நவம்பர் 22) இடம்பெற்ற சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த போர்க்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் படுகொலைசெய்யப்பட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் நடத்தியமைக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.”

“இந்த நாட்டில் ஊடகங்களின் சுதந்திரமும், சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்,” என்று துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...