விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

26 695b5ca406bfd

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், விவசாய அமைச்சினை நிறுவுவதற்காக ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் பெருந்தொகை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டது. இதில் பாரிய நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பில் லஞ்ச அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த அமைச்சரவை தீர்மானத்தின் போது அமைச்சராகப் பணியாற்றியவர் என்ற அடிப்படையில், அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று (05) காலை ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கமையவே, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு முன்னால் முன்னிலையாகி, இந்த ஒப்பந்தம் தொடர்பான விளக்கங்களை வழங்கியுள்ளார்.

இந்தக் கட்டிட ஒப்பந்தம் காரணமாக அரசுக்குப் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஏனைய சில முன்னாள் அமைச்சர்களிடமும் விசாரணைகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version