யாழ். கே.கே.எஸ் வீதியில் சிவலிங்க புளியடி சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டிருப்பதுடன் விபத்தின்போது மோட்டார் சைக்கிள் அங்கிருந்த கடைக்குள் புகுந்துள்ளது. இதனால் கடை சேதமடைந்த நிலையில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர்.
#SriLankaNews
Leave a comment