யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை வீட்டு உரிமையாளரால் குப்பைகளை புதைப்பதற்காக கிடங்கு வெட்டப்பட்ட சமயத்திலே அதற்குள்ளிருந்து இந்த குண்டு மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று குண்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
#SrilankaNews