நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு நாம் எதிர்ப்பு என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
“பஸில் ராஜபக்சவுக்கு நாம் எதிர்ப்பு. அவர் வசமே ஆளும் கட்சி உள்ளது. எனவே, பஸில் ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.
அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கொண்டுவந்தால்கூட அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்” – என்றார்.
#SriLankaNews