இந்திய குடியுரிமையை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் துறந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராவ் தெரிவித்தார். இதனை இவர் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்களவை கூட்டத்தில் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
6 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் 2017 தொடக்கம் இவ்வருட செப்டம்பர் 30 ஆம் திகதி வரையில் இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வெளிநாடுகளைச் சேர்ந்த 10,645 இந்தியக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களில் 4,177 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராவ் தெரிவித்தார்.
1 கோடி 33 இலட்சத்து 83 ஆயிரத்து 718 இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#IndiaNews