நாளொன்றுக்கு 80க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் – சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம்!

1637282703 1938 2

50% பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகள் குறித்தும் சுமார் 80 முதல் 100 முறைப்பாடுகள் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், மகளிர் உதவி மத்திய நிலையத்தின் 1938 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு வருவதாக உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பில், நாள் ஒன்றிற்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாகவும் , அவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பானவை மற்றும் பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகள் குறித்த முறைப்பாடுகளாக காணப்படுகின்றன.

கொவிட்தொற்று காலப்பகுதிகளில் இவ்வாறான அழைப்புகள் அதிகமாக கிடைத்துள்ளன.

வாழ்க்கைச்செலவு அதிகரித்து காணப்படும் நிலையில் பொருளாதாரச் சிக்கல்கள் மற்றும் ஆண்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது போன்ற காரணங்களால் இதுபோன்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவ்வாறான நிலையில் பாரிய அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பொலிஸாரின் உதவியுடன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மகளிர் உதவி மையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகளுக்கு ஏற்றவகையில் குடும்ப ஆலோசனைச் சேவைகள் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு செயல்முறை என்பவற்றிற்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews

Exit mobile version