பதவி இழப்பாரா மோடி…! பா.ஜ.க RSS இடையில் முறுகல்
பா.ஜ.க (BJP) மற்றும் ஆர்.எஸ்.எஸ் (RSS) இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த தேர்தலில் அக்கட்சி எதிர்கொண்ட முக்கிய சவால் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவின் பின்புலம் மற்றும் அதன் முழுமையான ஆதரவுத் தளமே ஆர்.எஸ்.எஸ் தான், கடந்த 10ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை மோடி அரசு மாற்றி அமைத்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.
மக்களை வீடு வீடாக சென்று சந்திப்பது மற்றும் அவர்களை பா.ஜ.கவிற்கு வாக்களிக்கத் தூண்டுவது போன்ற பணிகளை ஆர்எஸ்எஸ் சிறப்பாக செய்தது.
ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம் ஒரு தனிநபரை சார்ந்தது அல்ல. ஆனால், தற்போது மோடி (Narendra Modi) என்ற தனி நபரின் விம்பத்தில் பா.ஜ.க நகர்வதாக அது மாற்றப்பட்டு விட்டது.
எனவே, இரு தரப்பினருக்கும் இடையில் இந்த முறுகல் நிலை தோன்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.