உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே முசோரியில் பிரசித்தி பெற்ற சுர்கந்தா தேவி கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பங்கேற்க அப்பகுதியில் உள்ள பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. கிஷோர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர். அவர்கள் ரோப் காரில் ஏறி கோவிலுக்கு புறப்பட்டனர்.
ரோப் காரும் கோவில் நோக்கி நகர்ந்தது. சிறிது தூரம் சென்றதும் ரோப் கார் திடீரென பழுதானது. இதனால் அதில் இருந்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் 40 பக்தர்களும் நடுவானில் தவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ரோப் காரில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு எம்.எல்.ஏ. மற்றும் பக்தர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.
#IndiaNews