நுவரெலியா கும்புக்வெல பகுதியில் விறகு சேகரிக்க சென்ற 72 வயதான பீ.எம். டிங்கிரி மெனிக்கா என்ற மூதாட்டி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரின் புதல்வர்களும் பிரதேச மக்களும் தேடி வருகின்றனர்.
இது தொடர்பில் தெரிபே பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் தேடுதலை முன்னெடுத்த போதிலும் மூதாட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
எனினும் குறித்த பெண் விறகு வெட்டுவதற்காக எடுத்துச் சென்ற கத்தியை கண்டுபிடித்துள்ளனர்.
அதன் பின் குறித்த மூதாட்டி அணிந்திருந்த உடையும், விறகு தூக்கும் போது தலையில் வைத்துக் கொள்ள எடுத்துச் சென்ற சேலையும் கண்டெக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மோப்ப நாய்களை பயன்படுத்தி மூதாட்டியை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment