கடற்படையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற நபர் இன்னும் வீடு திரும்பாததால் அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் 22ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாசையூரை சேர்ந்த ஒருவர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் மண்டைதீவிற்கு அண்மையில் உள்ள பூவரசந்தீவு கடற்கரையில் படகில் பயணித்துள்ளார்.
அப்போது கடற்படையினர் மறைந்திருந்து மடக்கிப் பிடிக்க முற்பட்டபோதே கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகில் இருந்து குறித்த நபர் குதித்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் அதன்பின் வீடு திரும்பாததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.
#SriLankaNews