வேப்பமரம் ஒன்றில் இருந்து பால் வடிவதை பார்க்க மக்கள் படையெடுத்து செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு- மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்தில் மகிழூர்முனை பிரிவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயல் ஓரமாக அமைந்துள்ள வேப்பமரம் ஒன்றிலிருந்தே இவ்வாறு பால் வடிந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
தகவல் அறிந்த அந்தப் பகுதி மக்கள் விரைந்து சென்று அதனை பார்வையிட்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர்.
அத்துடன் மரத்துக்கு பட்டு கட்டியும் அதன் அருகே பாத்திரம் ஒன்றை வைத்து காணிக்கை செலுத்தி வழிபாடு செலுத்துவதையும் அவதானிக்க முடிகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews