image server news
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: 3.5 ரிச்டர் அளவில் பதிவு!

Share

இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் சுமார் 3.49 மணியளவில் இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஹொரவ்பொத்தானை போன்ற நிலப்பரப்புப் பகுதிகளில் உள்ள மக்களும் இந்த அதிர்வை உணர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித சுனாமி (ஆழிப்பேரலை) அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் இடர் மேலாண்மை நிலையம் உறுதிப்படுத்தியுள்ளன.

பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...