அமைச்சர்களின் வெளிநாட்டு பயணத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பிரதமர் இம்ரான்கான்,
மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்வதை தடை செய்துள்ளதாகவும், அத்தோடு தானும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார் .
பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக கடும் நிதி நெருக்கடி இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#world