வாசுதேவாவும் ராஜினாமா?

image 26ca8f03e9

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம், விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் திடீரென்று பறிக்கப்பட்டன.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வாசுதேவ நாணயக்கார தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அரசின் யுகதனவி மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வாசுதேவ நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version