நயினாதீவு பகுதியில் மினி சூறாவளி!

யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் மினி சூறாவளி வீசியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகிறது. இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா,

இந்த நிலையில், நேற்று மாலை வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு வடக்கு ஜே 35 கிராம சேவகர் பிரிவில் வீசிய மினி சூறாவளியால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அனுப்பி வைக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

FB IMG 1640865910672

#SriLankaNews

Exit mobile version