IMG 20211207 WA0041
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கடற்படையின் அட்டூழியங்களிற்கு எதிராக மாதகலில் கவனயீர்ப்பு!!

Share

கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரை கடற்படையினர் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் இன்றையதினம் (07) மாதகல் பகுதியில் கவனயீர்ப்பு ஈடுபட்டனர்.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து வெளியிடுகையில்,

குறித்த இருவரும் நேற்றையதினம் கடலுக்கு சென்று திரும்பி வரும் வேளையில் கடற்படையினர் அவர்களை வழிமறித்தனர். இதன்போது கடற்படையினரின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் அவ்விடத்தில் நின்றனர்.

இந்நிலையில் கடலில் மிதந்து வந்த, சுமார் 276 கிலோ கஞ்சாவை அவர்கள் கடத்தியதாக தெரிவித்து அவர்களை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பயணித்த படகு சிறியது. அந்தப்படகில் தொழில் முதல்கள் இருந்தன. இந்நிலையில் 276 கிலோ கஞ்சா எவ்வாறு அந்த படகில் கொண்டு வருவது?

அத்துடன் அவர்கள் பயணித்த படகின் ஜி.பி.எஸ்ஸினை பார்த்தால் அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் கஞ்சா கடத்தும் இடத்துக்கு சென்று உள்ளார்களா என தெரியவரும்.

கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர், “நீங்கள் காணி சுவீகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தானே” என தெரிவித்து ஈவிரக்கமற்ற முறையில் தாக்கியுள்ளனர். நாங்கள் அவர்களைப் பார்க்கச் சென்ற வேளை அவர்கள் எமக்கு இந்த விடயத்தை கூறியுள்ளார்கள்.

நேற்று இரவு அவர்கள் இளவாலைப் பொலிஸார் கையளிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே கைது செய்யப்பட்டவர்களை சரியாக விசாரணை செய்து உண்மைத் தகவலை வெளிப்படுத்த வேண்டும் – என்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...