யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் கடற்படையிரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா சந்தித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திலேயே இந்த சந்தித்து இடம்பெற்றது.
காணி உரிமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களை தனித்தனியாக சந்தித்து, காணி உரிமம் தொடர்பில் கேட்டறிந்தபோது, சிலருடைய காணிகளுக்கான சட்டரீதியான உரிமங்கள் இல்லாமை தெரியவந்துள்ளது,.
இவ்விடயம் தொடர்பில் ஆளுநர் சங்கானை மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
#SriLankaNews