vavuniya scaled
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

13 இற்கு எதிராக வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!

Share

ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராகவும், சமஷ்டித் தீர்வை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வவுனியாவில் மாபெரும் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகாமையிலுள்ள பண்டாரவன்னியன் நினைவுச் சிலைக்கு முன்பாக இந்தப் பேரணி ஆரம்பமானது.

இப்பேரணியானது, ஏ – 9 வீதியூடாகச் சென்று தாண்டிக்குளம் – ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தை அடைந்து பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.

சிவப்பு, மஞ்சள் கொடிகளுடன் பேரணியில் கலந்துகொண்ட மக்கள், “ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி சமஷ்டித் தீர்வை நடைமுறைப்படுத்து”, “சர்வதேச விசாரணை வேண்டும்”, “இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்”, “இந்த மண் எங்களின் சொந்த மண்”, “இராணுவமே வெளியேறு”, “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கு” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

பேரணி முடிவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தை நீக்கக் கோரி கடந்த ஜனவரி 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கிட்டு பூங்கா பிரகடனத்தை வலியுறுத்தி ஐயனார் விளையாட்டுக்கழக மைதானத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்ததுடன் தமிழர் எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சி உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...