யாழ்ப்பாணம் – மடம் வீதியில் உள்ள கால்வாய் ஒன்றில் சிறுவர்கள் மீன் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த வேளை அவர்களின் தூண்டிலில் குண்டு அகப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிறுவர்கள் மீன் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த வேளை அவர்களது தூண்டிலில் திடீரென ஒரு பாரமான பை அகப்பட்டது.
உடனே குறித்த சிறுவர்கள் அதனை தூக்கி பார்த்தபோது அப் பையில் துருப்பிடித்த நிலையில் வெடிகுண்டு ஒன்று இருந்தது அவதானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிகுண்டினை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று விசேட அதிரடிப் படையின் உதவியுடன் மீட்கவுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
#SrilankaNews