சாவகச்சேரி மருத்துவமனையில் பலருக்கு தொற்று!

chava hospital

சாவகச்சேரி மருத்துவமனையில் பலருக்கு தொற்று!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இன்று 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த 31 பேரிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையில் 21 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெருமளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவர்களில் 45 பேரிடம் நடத்தப்பட்ட பி.சி.ஆர்சோதனையில் 41 முதியவர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version