பூநகரி கடற்பரப்பில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

poonakari

பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடல் பிரதேசத்தில்  இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடல் பகுதியிலேயே இன்று (23) காலை சடலம் அடையாளங்காணப்பட்டுள்ளது.

குறித்த சடலம் ஆணொருவரது எனத் தெரிய வருகிறது.

சடலத்தை இனங்கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியவுடன்,
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version