கொரோனாவிலிருந்து மீண்டார் மனோ கணேசன்!

mano

கொரோனா வைரஸ் தொற்றினால் சுகவீனமுற்று கடந்த சுமார் பத்து நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் பூரண சுகம் பெற்ற நிலையில் இன்று வீடு திரும்பினார்.

ஊடகங்களுக்கு இது பற்றி கருத்து கூறிய மனோ எம்பி,

“சுகவீனமுற்ற வேளையில் எனக்கு ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு, அன்பையும், நம்பிக்கையையும் நேரடியாகவும், ஊடகங்கள், தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் தெரிவித்த கட்சி, கூட்டணி, நண்பர்கள், ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறினார்.

#SriLankaNews

Exit mobile version