நாமலின் ருவிற்றர் பதிவுக்கு மனோ கணேசன் பதிலடி!!

மனோ கணேசன்

நாமலின் ருவிற்றர் பதிவுக்கு மனோ கணேசன் பதிலடி!!

.’தமிழகத்து இலங்கை அகதிகளை வரவேற்க முன், யாழ்ப்பாணத்தில் பத்தாண்டுகளாக இடம்பெயர் முகாம்களில் வாழும் தமிழ் மக்களை மீளக்குடியேற்றுங்கள்’ இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யுத்தகாலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச நேற்று தனது ருவிற்றர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்தபோதே மனோ கணேசன் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ச தனது ருவிற்றர் தளத்தில் இதனைப் பதிவிட்டிருந்தார்.

இலங்கைக்கு மீள வருகைதரும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வர் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே மனோ கணேசன், யாழ்ப்பாணம் வலி-வடக்கில் பலாலி உட்பட வளமான காணிகளில் இருந்து இராணுவத்தை அகற்றி இம் மக்களை தம் சொந்த நிலங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு நாமல் ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.

Exit mobile version