முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீமும் நாளை யாழுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
13ம் திருத்தச் சட்டத்தை ஆரம்ப நிலையில் இருந்ததைபோல் முழுமையாக நடைமுறைப்படுத்த இந்திய அரசை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலாநாதன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் , ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா ஆகியோருடன் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews