களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த சமரசிங்கவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மஞ்சு லலித் வர்ண குமாரவை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
தேர்தல்கள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (30) தீர்மானத்தை எட்டியதுடன், அது தொடர்பான வர்த்தமானியும் வெளியிடப்படும் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews