அரசுக்குள் இருந்து கொண்டே சூழ்ச்சி! – ரொஷான் ரணசிங்க குற்றச்சாட்டு

roshan 1

“அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்வதைவிட, வெளியேறி அரசியல் செய்யுங்கள்.” – இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க.

அத்துடன், விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திரக்கட்சியை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவரும் ரொஷான் ரணசிங்க, பல தடவைகள் வெளியே செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சு.கவின் சிரேஷ்ட உப தலைவர் நிமால் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version