கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

navy officer arrest 1600 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 1 850x460 acf cropped

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதியில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று(24) குறித்த நபரிடம் மேற்கொண்ட சோதனையின்போது அவரிடமிருந்து பொதி செய்யப்பட்ட 1 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

இவ்வாறு கைதானவர் 44 வயதான பாலையூற்று பகுதியைச் சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது

கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version