image
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவிகளுக்கு ஆபாச காணொளி: நானுஓயாவில் 56 வயது நபர் கைது!

Share

பாடசாலை மாணவிகளுக்குத் தொடர்ச்சியாக ஆபாச காணொளிகளைக் காண்பித்த குற்றச்சாட்டில், 56 வயதுடைய நபர் ஒருவரை நானுஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நானுஓயா பொலிஸ் மகளிர் பணியகத்தினால் பாடசாலை மாணவிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பாதிக்கப்பட்ட மாணவிகள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தச் சட்டவிரோதச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் நானுஓயா பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 6 மாணவிகள் இது குறித்து முறைப்பாடு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் (JMO) பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று (21) ஆஜர்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமைப் பரிசோதகர் ஜனக பண்டார வழிகாட்டலில், பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான சமூகச் சீர்கேடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சமின்றிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...