வீட்டில் இருந்த பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் 43” தொலைக்காட்சி, சீடி பிளேயர் மற்றும் சமையல் அறை இலத்திரனியல் உபகரணங்கள் என்பன களவாடப்பட்டிருந்தன.
குறித்த இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்த போது சந்தேகநபரும், விற்பனை செய்ய உதவிய தரகரம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேகநபர் அச்சுவேலியில் வசித்து வருவதோடு, கடந்த 10 ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் ஒருவரை தாக்கி மோதிரத்தை பறித்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய இன்னும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த 3 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment