ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இந்நிலையில் அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலநறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை 2022 முற்பகுதியில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அத் தேர்தலில் வடமத்திய மாகாணத்தில் பொலநறுவை மாவட்டத்தில் மைத்திரியின் மகன் போட்டியிடுவார் என தெரியவருகின்றது.
அதேவேளை, மைத்திரியின் மகள், தற்போதைய சூழ்நிலையில் செயற்பாட்டு அரசியலில் இறங்கமாட்டார் எனவும் சு.க. தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews