மைத்திரி அணி யாழில் தனிவழி!

maithri

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் இடம்பெறும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சில பகுதிகளில் கூட்டாகவும், சில மாவட்டங்களில் தனித்து களமிறங்குவதற்கும் சுதந்திரக்கட்சி உத்தேசித்துள்ளது.

இதன்படி வடக்கில் யாழ்.மாவட்டத்தில் அக்கட்சி கை சின்னத்தில் அல்லது கூட்டணி அமையும் பட்சத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தனித்து போட்டியிட்ட சுதந்திரக்கட்சி ஒரு ஆசனத்தை கைப்பற்றியது.

Exit mobile version