பாராளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் இனியும் நடந்துகொள்ள வேண்டாம். சபை நாகரிகத்தை முறையாக பின்பற்றவும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, பாராளுமன்றில் மற்றவர்களைஅவதூறாக பேசுவதோ அல்லது சபையில் அநாகரிகமாக நடந்துக்கொள்வதையோ தவிருங்கள் என கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எனது பொறுப்பு. அதனை சரிவர செய்துள்ளேன் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
#SriLankaNews