“விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும். அவரால் குற்றச்சாட்டை நிரூபிக்கமுடியாமல்போனால் பதவி விலகவேண்டும்.”
இவ்வாறு அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எனது கட்சியும், நானும் உரக் கம்பனிகளிடமிருந்து நிதியை பெற்றுவிட்டே போராடுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு எதிராக இழப்பீடுகோரி நிச்சயம் வழக்கு தொடுக்கப்படும்.
அதேபோல எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மஹிந்தானந்த அளுத்கமகே நிரூபித்துக்காட்ட வேண்டும். இல்லையேல் அவர் அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும். ” – என்றார்.
அதேவேளை, விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நாட்டில் மேலும் பல பகுதிகளில் நேற்றும் போராட்டம் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews