மஹிந்த – வீரவன்ச சந்திப்பு!!

mahi weera

பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அரசுமீது கடும் அதிருப்தியில் இருக்கும் விமல்வீரவன்ச, தனிவழி பயணத்துக்கு தயாராகிவரும் சூழ்நிலையிலேயே, மொட்டு கட்சியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவரை அவசரமாக சந்தித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில், அரச கூட்டுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் நிலை உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

முரண்பாடுகளை நீக்கி, இணைந்து பயணிப்பது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

#SriLankaNews

Exit mobile version