தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், அரசாங்கம் எல்லாவற்றிலும் தேவையற்ற முறையில் தலையிட முயற்சிப்பதன் மூலம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது. தற்போதைய ஆட்சியாளர்களிடம் நாட்டை முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகள் இருந்தபோதிலும், அவை நடைமுறையில் தோல்வியையே தழுவுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கத்தில் ஒரு சில நேர்மறையான அம்சங்களை நாம் கண்டாலும், பெரும்பான்மையான விடயங்கள் எதிர்மறையாகவே (Negative) அமைந்துள்ளன என்பதுதான் தற்போதைய பிரதான பிரச்சினை” என மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
அரசாங்கம் தனது அணுகுமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதையே முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் உணர்த்துகின்றன.