இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் டெஸ்ட் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனம் ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அடுத்த ஒருவருடத்திற்கு குறித்த நியமனம் செல்லுபடியாகும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஜெயவர்த்தனவின் இப்புதிய நியமனத்தின் கீழ், தேசிய ஆண்கள் அணியைத் தவிர அனைத்து தேசிய அணிகளின் கிரிக்கெட் பிரிவின் பொறுப்பாளராகவும் செயற்படவுள்ளார்.
மேலும், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் செயல்திறன் மையத்தில் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கான அனைத்து மூலோபாய திட்டங்களை வகுக்கும் பொறுப்பும் மஹேலவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
#srilankaNews