இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

MediaFile 4 2

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் இந்த நன்னாள், “அறியாமை எனும் இருள் நீங்கி ஞானம் எனும் ஒளியைப் பெறும் இரவாக” போற்றப்படுகின்றது.

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் உள்ளிட்ட பஞ்ச ஈஸ்வரங்களிலும், கொழும்பு உள்ளிட்ட மலையகப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் இன்று மாலை முதல் விசேட அபிஷேகங்களும் வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. “அன்பே சிவம்” என்ற தத்துவத்தை உணர்ந்து, ஆணவத்தை விடுத்து இறைவனிடம் சரணடைய ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயங்களில் திரண்டுள்ளனர்.

 

 

Exit mobile version