மீண்டும் பிரதமராகிய மெக்தலினா ஆன்டர்சன்!

Sweden

Sweden

சுவீடனின் முதல் பெண் பிரதமராகிய மெக்தலினா ஆன்டர்சன் பதவியைத் துறந்த அடுத்த வாரமே மீண்டும் பிரதமராகியுள்ளார்.

சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லேப்வென் அண்மையில் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த 24-ந் திகதி அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான மெக்தலினா ஆன்டர்சன் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் சுவீடனின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அவர் பதவி விலக வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

அதாவது கூட்டணி ஆட்சியை அமைக்க அவரது கட்சிக்கு வழங்கிய ஆதரவை கிரீன்ஸ் கட்சி திடீரென திரும்பப்பெற்றது.

அதனால் அந்த நாட்டின் அரசியல் சாசன நடைமுறைப்படி கூட்டணிக்கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டால் அரசு பதவி விலகித்தான் ஆக வேண்டும். எனவேதான் பிரதமர் மெக்தலினா தனது பதவி உடனடியாக துறந்தார்.

இந்த நிலையில் சுவீடனின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக பாராளுமன்றம் நேற்று கூடிய நிலையில் பிரதமருக்குரிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் பல எம்.பி.க்கள் மெக்தலினாவை பிரதமராக தேர்வு செய்ய ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

இதை தொடர்ந்து அவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு அவரது புதிய மந்திரி சபை இன்று பதவி ஏற்கவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

#world

Exit mobile version