கொழும்பிலிருந்து யாழ் வந்த தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் மதவாச்சிக்கும் – கிரிகொல்லாவுக்கும் இடைப்பட்ட 145 வது மைல் கல்லிற்கு அருகிலுள்ள வளைவில் வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பஸ் உருண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் பஸ்ஸில் பயணித்த பலர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment