புலிகளின் தலைவர் துப்பாக்கியாலேயே உயிரிழந்திருக்கலாம்! – பிரபல நடிகரின் பரபரப்பு பேச்சு

kayan

“அன்றே விடுதலைப்புலிகளின் தலைவர் நாட்டைக் கைப்பற்றி, அவரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்” – இவ்வாறு பிரபல சிங்கள நடிகர் கயான் விக்ரமதிலக்க தனது முகநூலில் பரபரப்பு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொலியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான், மிகவும் சிந்தித்தே இதனை தெரிவிக்கிறேன். நாட்டில் தற்போது மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை பார்க்கும் போது, விடுதலைப்புலிகளின் தலைவர் நாட்டைக் கைப்பற்றி அவரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன்.

தற்போதைய அரசாங்கத்தை பதவியில் அமரவைக்க கயான் விக்ரமதிலக்க என்ற நானும் பெரும் பங்காற்றியுள்ளேன். நெற்றில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விட மிகக் கொடுமையானது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்ந்த சந்தர்ப்பத்தில், நாங்கள் குழப்பமடைந்திருந்தோம். எனினும் அவை அனைத்தும் திட்டமிட்டே நடந்தவை என தற்போது எனக்கு என்னத் தோன்றுகிறது.

நாட்டில் தற்போது அனைத்துக்கும் பற்றாக்குறை. நாட்டு மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர். புலிகளின் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி முழு நாட்டு மக்களும் உயிர் இழந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நீங்கள் செய்தவை அனைத்துமே போதும். நாட்டு மக்கள் மீது சிறிதளவாயினும் அக்கறை இருந்தால் நாளையே இராஜினாமா செய்துவிடுங்கள் – என்றுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version