சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீடு ஒன்றினுள் புகுந்ததால் அங்கிருந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வீதியால் சென்று கொண்டிருந்த லொறி, கட்டுப்பாட்டை இழந்து நேராக அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது. இந்த கோர விபத்தில் மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#IndiaNews