களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று அவர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக குறித்த பதவியை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அண்மையில் விலகியிருந்தார்.
இதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
#SriLankaNews

